இவரு என்ன கையெடுத்துக் கும்பிட வேண்டிய கடவுளா..? தளபதி ரசிகர்களை சீண்டிப் பார்த்த தயாரிப்பாளர்..!

0
161
vijay-cineseithigal
vijay-cineseithigal

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் சமீபத்தில் இவர் மாஸ்டர் என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பல்வேறு நடிகர்களை வம்புக்கு இழுத்து பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் அந்த வகையில் இவர் விஜய்யை பற்றி தரக்குறைவாக பேசியது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் சூர்யா ஜெய் பீம் திரைப்படம் பற்றிய பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது அதை பற்றி தயாரிப்பாளரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த ராஜன் ஒரு ஆட்டோ காரனுக்கு பிரச்சினை என்றால் இன்னொரு ஆட்டோக்காரன் வருவான் ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு பிரச்சனை என்றால் வேறு யாரும் வர மாட்டார்கள்.

ஏனெனில் தற்போது இருக்கும் நடிகர்களுக்கு ஒற்றுமை என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் போய்விட்டது அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் ஆளுமை கூட சரியில்லை ஏனெனில் இதற்கு முன்பாக விஜயகாந்த் சரத்குமார் போன்றவர்கள் தலைமை தாங்கிய பொழுது ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவர்கள் குரல் கொடுத்து இருப்பார்கள்.

சமீபத்தில் கூட விஜய் வீட்டில் சோதனை  நடைபெற்றது அப்போது அவருக்கு ஆதரவாக பேசிய ஒரே மனுஷன் நான் மட்டும் தான் வேறு எந்த நடிகரும் பேசவில்லை ஆனால் அதற்கு கூட நன்றி சொல்ல விஜய்க்கு வக்கு இல்லை.

ஆனால் தாங்கள் தான் பெரிய ஹீரோ என்று பீத்திக் கொண்டு திரிவது மட்டுமில்லாமல் பல ரசிகர்கள் இவர்களை தான் திரைஉலக கடவுள் என்றும் நினைத்து வருகிறார்கள். இவ்வாறு ராஜன் பேசியதால் தளபதி ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளவர்கள்.

rajan-cineseithigal
rajan-cineseithigal