வசூலில் விஷாலின் ” மார்க் ஆண்டனி”

Mark-Antony
Mark-Antony

Mark Antony: இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான “மார்க் ஆண்டனி” திரைப்படம் தற்போது நல்ல வசூலை பெற்று வருகிறது. விஷால் , எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ள “மார்க் ஆண்டனி” திரைப்படம் 15ஆம் தேதி வெளியானது. முதல் நாளில் இப்படத்திற்கு  நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதன் இரண்டாவது நாளில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நல்ல வசூலை பெற்றது. தற்போது இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபீசிலும்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் , தெலுங்கு மொழிகளில் வெளியாகி அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் முக்கியமாக எஸ் ஜே சூர்யா வின் அட்டகாசமான நடிப்பின் மூலம் தியேட்டரில் ரசிகர்கள் செம்மையாக என்ஜாய் செய்தனர். ஒவொவொரு காட்சியிலும் ரகளை செய்துவிட்டார் எஸ் ஜே சூர்யா .

இவர் நடித்த அனைத்து காட்சிகளும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. முதல் இரண்டு நாட்களில் நல்ல விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில்  வசூளை குவித்துள்ளது. முதல் இரண்டு நாட்களில் 7 முதல் 9 கோடி வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷாலின் படத்துக்கு கிடைத்த சிறப்பான ஓப்பனிங் என கூறப்படுகிறது. நடிகர் விஷால் பல தோல்விகளை சந்தித்து தற்போது அவருக்கு ஒரு சிறப்பான ஆரம்பித்தை இந்த படம் அமைந்துள்ளது.

இந்தப் படம் 40 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் இரண்டு நாட்களில் 20 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.