அப்பாவை நேரில் சந்தித்த விஜய்

Vijay
Vijay

Vijay- Chennai :  நடிகர் விஜய் தனது “லியோ” படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த திரைப்படமான ” தளபதி 68″ படத்திற்காக அமெரிக்கா சென்றிருந்த விஜய் இரு தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். அதே நாளில் அறுவை சிகிச்சை முடித்து ஓய்வில் இருக்கும் தனது அப்பாவை நேரில் சென்று பார்த்து வந்தார்.

நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த விஜய் தனது அப்பாவிடம் பேசியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சிய்யை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வரை பேசாமல் இருந்ததற்கு காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

பேசாமல் மறுத்த விஜய் : தனது “நாளைய தீர்ப்பு” திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, இன்று கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வளம் வந்துகொன்டுருக்கிறார். ஆரம்ப காலங்களில் இவருக்கு சப்போர்ட்டாக இருந்து வந்தவர்கள் இவரது பெற்றோர் எஸ் ஏ  சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபாவும் மட்டும் தான். இவரது பெற்றோர்கள் தொடர்ந்து விஜய்க்காக படங்களை இயக்கி, தயாரித்தும் வந்தனர். விஜய்க்கு என ஒரு அடையாளம் கிடைக்கும் வரை அவரது அப்பா தான் பக்கபலமாக இருந்தார்.

இந்நிலையில், திடீரென விஜய்யும் அவரது அப்பாவும் பேசாமல் இருந்து வந்தனர். இருவர்க்கும் இடையே பிரச்சனை எனவும், அதனால் அவர்கள் சந்தித்துக் கொள்வது இல்லையென்றும் தகவல்கள்  வெளியாகின. இந்நிலையில் விஜய் அவரது பெற்றோர்களை சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையதளங்களில் வைரலானது. எந்தவிதமான சண்டையும் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக தனது அப்பாவை நேரில் சந்தித்தார் விஜய்.

இதற்கிடையில் விஜய் தனது அப்பாவிடம் பேசாமல் இருந்ததற்கு காரணம் தற்போது வெளிவந்துள்ளது. எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் விஜய். இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு விருப்பம் இல்லையென்றாலும் தனது அப்பா கேட்டு கொண்டதால் நடித்தார்.

அதேபோல், மதுர படத்தின் கதையையும் எஸ் ஏ சந்திரசேகர் மட்டுமே கேட்டு ஓக்கே செய்து விட்டாராம். இதே  போல் சில படங்களின் கதைகளிலும் விஜயின் அப்பா தலையிட்டதும் அதில் சில திருத்தங்களை அவரே செய்ததும் விஜய்க்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. விஜய்யின் அரசியல் பயணத்திலும் எஸ் ஏ சந்திரசேகர் தன்னிச்சையாக முடிவெடுத்ததும்,  இதன் காரணமாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது  எந்த தயக்கமும் இல்லாமல் தனது அப்பாவை நேரில் சந்தித்தார் விஜய்.