துபாயில் சைமா 2023 விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

SIIMA-2023
SIIMA-2023

SIIMA 2023 -Dubai : துபாயில் சைமா விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த நடிகர் , நடிகை மற்றும் சிறந்த இயக்குனர் ஆகியோர்களுக்கு  விருதுகள் வழங்கப்பட்டன. இதில் என்றும் இளமை என  நிரூபிக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

இவர் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான” விக்ரம்” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் இப்படத்தில் வரும் பாடலான ”பத்தல பத்தல” என்ற பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகர் என்ற விருதையும் பெற்றார்.

அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது திரிஷா அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் மணிரத்தினம் இயக்கிய ”பொண்ணியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருந்தார் . மற்ற நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் சிறந்த நடிகைக்கான விருதை வென்று கம்பேக் கொடுத்துள்ளார். இதில் சிறந்த படத்துக்கான விருதையும் ”பொன்னியின் செல்வன்” பெற்றுள்ளது. இதற்கான விருதை மணிரத்தினம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மேலும் இதில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது ” லவ் டுடே” படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கும், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது ”விருமன்” படத்தில் நடித்த அதிதி சங்கருக்கும் வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த வில்லன் நடிகர்  விருதை” டான் “படத்திற்காக எஸ் ஜே சூர்யா  வென்றார், சிறந்த துணை நடிகர் விருது ”கார்கி” படத்தில் நடித்த காளி வெங்கட்டுக்கும், சிறந்த துணை நடிகை விருது ”விக்ரம்” படத்தில் ஏஜென்ட் டினாவாக மிரட்டிய  டான்சர் வசந்திக்கும் வழங்கப்பட்டது.

அதேபோல் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை ”லவ் டுடே” படத்தில் நடித்த யோகி பாபுவுக்கு வழங்கப்பட்டது. இது தவிர மேலும் பல பிரிவுகளில் ”சைமா” விருதுகள் வழங்கப்பட்டன. தெலுங்கில் சிறந்த இயக்குனர் விருதை ”ஆர். ஆர். ஆர்” படத்திற்காக ராஜமௌலி வென்றார். சிறந்த தெலுங்கு படமாக ”சீதா ராமம்” தேர்வானது குறிப்பிடத்தக்கது.