மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!வைரலாகும் வீடியோ..!

srimathi
srimathi

sakthi-school-srimathi-death-news: சமீபத்தில் சமூக வலைத்தளம் மற்றும் தமிழ்நாட்டையே உருகுளைத்த  சம்பவம் தான் மாணவி ஸ்ரீமதியின் மரணம்.  கடந்த 13ம் தேதி  மாணவி ஸ்ரீமதி பள்ளி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பினர்களிடமிருந்து தகவல் தெரிவித்தனர்.

மாணவி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது என்று பெற்றோர் கூறியதன் தொடர்ந்து பல்வேறு இளைஞர்கள் அப்பள்ளிக்கு சென்று போராட்டம் செய்தனர். அந்தப் போராட்டமானது மிகவும் தீவிரமடைந்து போர்க்களம் போல் காட்சியளித்தது.

அந்தப் பள்ளி வளாகத்தில் இருக்கும் பேருந்துகள்,  நாற்காலிகள் சான்றிதழ்கள்  என அனைத்தையும் நமது இளைஞர்கள் ஆவேசத்தில் அனைத்தையும் எரித்து விட்டனர். இதையெல்லாம் நாம் ஏற்கனவே பார்த்த விஷயம் தான். மேலும் இந்த பள்ளி நிறுவனம் இதுவரைக்கும் விடுதி சான்றிதழ் வாங்கவில்லை என்பது  தான் முக்கிய காரணம் என்று  பலரும் கூறி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட பத்து நாட்களாகிய நிலையில் அந்த மாணவி எதற்காக இறந்தார் என்ன காரணம் என்று இதுவரை காரணம் வெளிவரவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகுதான் பெற்றோர்கள் தன் மகளின் உடலை வாங்கி இறுதி சடலத்தை செய்வதற்காக ஒப்புக்கொண்டனர்.

அதில் அம்மாணவியின் தாயார் கதறல் இன்றளவும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த வகையில் தற்பொழுது  மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலத்தின்போது எந்த ஒரு நிகழ்வும் நிகழக் கூடாது என்பதற்காக பல காவல் துறையினர் அங்கு குவிந்துள்ளனர்.

இதனைப் பார்த்த பலரும் மாணவி ஸ்ரீமதியே மண்ணுக்குள் போய்விட்டார் இதன் பிறகு எப்படி வழக்கு மட்டும் நடக்கப் போகிறது அதுவும் போய்விட்டது என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/pjtqXBTWliE