சாய் பல்லவிக்கு நேர்ந்த கொடுமை!! சொந்த சமுகத்தில் இடம் இல்லாமல் தவிப்பு !!!!

0
299
saipallavi
saipallavi

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் சாய் பல்லவி.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக பிசியாக நடித்து வருகிறார். மாரி 2 படத்தில் தனுஷ் உடன் சாய்பல்லவி ஆட்டம் போட்ட, ரவுடி பேபி பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்தது. அதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார்.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி மீது அவருடைய சமுதாய பெரியவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகின்றது. தமிழ் நாட்டில் ஊட்டியில் மட்டும் அதிகம் வாழும் படுகா வகுப்பை சேர்ந்தவர் நடிகை சாய்பல்லவி.

படுகா இன மக்களுக்கு என தனியாக மொழி உள்ளது. ஆனால், அந்த மொழிக்கு சில எழுத்துகள் இருந்தாலும் அவை நடைமுறையில் இல்லை. சுமார் 5 லட்சத்திற்கும் குறைவான மக்களே இந்த வகுப்பில் உள்ளனர்.

இந்த வகுப்பு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. கட்டுப்பாடு, உபசரிப்பு, ஒழுக்கம், பாரம்பரியம், கடவுள் பக்தி, உழைப்பு, தன்மானம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர்கள் அந்த சமுதாய மக்கள்.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி சினிமாவில் நடிப்பது, கட்டுப்பாடான அவரது சமுதாய பெரியவர்களுக்கு பிடிக்கவில்லை. ’என்ன இது அரைகுறையா ட்ரெஸ் போட்டுக்கிட்டு சினிமாவுலலாம்’ என்பார்களாம்.

அந்த சமுதாயத்தில் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு இருக்கும் சாய் பல்லவியின் குடும்பத்தினரோ ‘அவ என்னைக்குமே கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ உடையணிஞ்சு நடிச்சதில்லை.

கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அதுக்கு என்னைக்கும் அப்படி நடிக்க மாட்டா. கத்தியில நடக்கிற மாதிரியான சினிமா வாழ்க்கையில அவர் ரொம்பவே ஒழுக்கமான பொண்ணா தான் இருக்குறா என்று சமுதாய பெரியவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறார்களாம்.

ஆனால், இதற்கு உடன் படாத சில பெரியவர்கள் இப்படியே விட்டால் சரியா வராது. ஒரு வேளை, இப்படியே விட்டால் இன்னும் என்ன என்னமோ பண்ணி நம்முடைய சமுதாயத்தின் பெருமையை கெடுத்து விடுவார்கள்.

இதனால், சாய் பல்லவி குடும்பத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளார்களாம். முக்கியமாக, படுகா சமுதாயம் சார்பில் நடக்கும் முக்கியமான விசேஷங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்ற வற்றில் சாய் பல்லவி குடும்பத்தினர் கலந்து கொள்ள தடை போடுவது என பேசி வருகிறார்களாம்.

சாய் பல்லவி மீது அவரது சொந்த சமுதாயத்திற்குள்ளேயே போர்க்கொடி தூக்கியிருகிறார்கள் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. இது எங்கே போய் முடியப்போகுதோ தெரியவில்லை.