பிரபாஸ் உடன் ஜோடியாகும் நயன்தாரா

Nayanthara
Nayanthara

Nayanthara- Prabhas : “ஜவான்”  திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூளிலும் 500 கோடிக்கு மேல் வசுலித்த  நிலையில் இன்றும் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.

இதில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த “இறைவன்” படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து பிரபாஸ் நடிக்கும் “கண்ணப்பா” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்தி கதையில்  உருவாக இருக்கும் இப்படத்தில் சிவன் வேடத்தில் பிரபாசும் பார்வதி வேடத்தில் நயன்தாராவும் நடிக்க இருக்கிறார்கள்.

பான் இந்திய கதையில் உருவாகும் இந்த படத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள “சலார்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் , தற்போது “கல்கி 2898 ஏடி” திரைப்படத்தில் கமல்ஹாசன் ,அமிதாப்பச்சன் உடன் பிரபாஸ் இணைந்து நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து “கண்ணப்பா” என்ற திரைப்படத்தில் பிரபாஸ் நடிப்பார் என கூறப்படுகிறது.