”லியோ” திரைப்பட இசைவெளியீட்டு விழா தேதி அறிவுப்பு..

LEO
LEO

சென்னை : இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”லியோ”. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன்,  மிஸ்கின்,  சாண்டி,  மேக் யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

“லியோ” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் அனிருத் இசையமைத்திருக்கிறார். அதன்படி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 30ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகவும் அதன்படி இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதற்கான பணிகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் விஜய் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இசை வெளியீட்டு விழாவுக்கு  விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் மாவட்டத்திற்கு 200 பேர் அழைக்கப்பட உள்ளதாகவும், பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் சொந்த வாகனங்களில் ரசிகர்கள் விழாவில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழா அரங்கின் வெளியே பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதி பெற்று வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.