மறுபடியும் உயரத்திற்கு சென்ற தங்கம்! தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வு!!!

gold
gold

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.808 அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை சமீப காலத்தில் பெரும் உயர்வை கண்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். பின்னர் மெல்ல மெல்ல விலை குறைந்தது.

ஆனால், சமீப நாட்களாக வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையா மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இன்று, ஒரு சவரம் தங்கத்தின் விலை ரூ.808 அதிகரித்து ரூ.32,936-க்கு விற்கப்படுகிறது.

அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.101 உயர்ந்து ரூ.4,117 ஆக உள்ளது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.