நடிகர் பிரபுதேவா திரை உலகில் முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? இத வச்சி என்னதான் பண்ணி இருப்பாரோ..?

0
620
prabudeva-cineseithigal
prabudeva-cineseithigal

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நல்ல நல்ல திரைப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகர் பிரபுதேவா இவர் ஒரு நடிகர் மட்டுமின்றி நடன இயக்குனரும் கூட அந்த வகையில் தற்போது இயக்குனராகவும் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவராமல் இணையத்தில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்று ரசிகர்களை கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் பிரபுதேவா சமீபத்தில் பாகீரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது விரைவில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் நடந்த தன்னுடைய அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அப்பொழுது அவர் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களை கண் கலங்க வைத்துவிட்டது.

அதாவது இவர் திரை உலகில் அறிமுகம் ஆன பொழுது முதல் முதலாக இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் சம்பளமாக பெற்ற தொகை வெறும் 500 ரூபாய் மட்டுமே இதை மணிரத்தனம் ஏ தன்னுடைய கையால் கொடுத்தார் என கூறி பெருமிதம் கொண்டுள்ளார்.