ஏழு வருடங்களுக்கு முன்பாக சொன்ன கதைக்கு சேரனிடம் இன்று அடி போடும் பிரபல இயக்குனர்..!

0
180
cheran1-cineseithigal
cheran1-cineseithigal

director cheran fans update his memories: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் சேரன்.  இவர் இயக்குனர் மட்டுமல்ல நடிகரும் கூட. இவர் தானே நடித்து தானே இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்தவகையில் நாம் பார்த்தால் தவமாய் தவமிருந்து,பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் என பல திரைப்படங்களை இவர் இயக்கி நடித்துள்ளார்.சமீபகாலமாகவே இவர் எந்தவொரு திரைப்படத்திலும் நடிப்பதும் இல்லை இயக்குவதும் இல்லை.

அந்த வகையில் தற்போது சேரன் அவர்கள் கல்லூரி விழாவில் சொன்ன கதையை பற்றி தற்பொழுது ஒரு ரசிகர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் நடிகர் மற்றும் இயக்குனரான சேரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவரிடம் கேள்விகள் கேட்பவர்கள் கேட்கலாம் என்று சொன்னதும் ஆசிரியர் ஜெயந்த் அவர்கள் சொன்ன கேள்வியை நீங்கள் படமாக நடித்து முடியாதா என்றும் வருங்காலத்தில் இதை படமாக எடுப்பீர்களா என்று கேட்டதற்கு அவர் ஒரு பதில் கூறினார். அது இன்றளவும் நாம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற அந்த ரசிகர் கூரியுள்ளார்.

அதாவது அம்மா வேறு ஒரு நாட்டிலும்,அப்பா ஒரு நாட்டிலும், அண்ணன் தங்கை என எல்லோரும் வேறு வேறு நாடுகளில் இருந்தும் அவருடைய பாசம் மற்றும் வழிகள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை படமாக எடுக்க விரும்புகிறேன் என்ற அந்த ரசிகர் கூறியுள்ளார்.

cheran-cineseithigal
cheran-cineseithigal

இதற்கு “நீ தயாரித்தால் நான் படமாக தயாரிக்க ரெடியாக இருக்கிறேன்” என்று சேரன் அவர்கள் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் என்னிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை, கண்டிப்பாக என்னிடம் பணம் இருக்கும் பொழுது நான் உங்களை அணுகுவேன் என்ற அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு சேரன் அவர்கள்  இதை நினைவில் வைத்து பகிர்ந்தமைக்கு நன்றி என்று கூறியது மட்டுமல்லாமல் ஒரு சில கருத்துக்களையும் கூறி இருக்கிறார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.