சேப்பாக்கமாக மாறிய சேலம்.. விரைவில் தோனி கலந்து கொள்ளும் ஐபிஎல் போட்டி

dhoni
dhoni

சேலத்தை அமெரிக்காவாக மாற்றுவேன் என சொன்னாலும் சொன்னார் அதை செய்து காட்டாமல் விட மாட்டார் போல நம்ம முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். சமீபத்தில்தான் சேலத்தில் பறக்கும் பேருந்து நிலையம் திட்டத்தை தொடங்கி அமோகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சேலம் அருகே கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கி சேலத்தை கௌரவப்படுத்தி உள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை போல புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை நேற்று காலை 9 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். உடன் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பிறகு ராகுல் ட்ராவிட் பந்துவீச எடப்பாடி பழனிச்சாமி பேட் செய்து ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தனர். இதற்கிடையில் பிசிசிஐ முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓனர் ஸ்ரீனிவாசன் எதிர்காலத்தில் ஐபிஎல் சேலத்தில் நடைபெறும் என்றும் அதில் நிச்சயம் தோனி பங்கேற்பார் எனவும் கூறியுள்ளார்.

வெறும் விளையாட்டு மைதானம் மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் செய்ததற்குப் பிறகு தொடர்ந்து இந்திய அளவிலான முன்னேற்றத்தை கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது சேலம் மக்களிடையே பெரிய கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாக சேலத்து இளைஞர்கள் காலரை தூக்கிக்கொண்டு சுற்றி வருகின்றனர்.