anchor archana latest our daughter photos: தமிழ் திரையுலகில் நடிகை, தொகுப்பாளினி போன்ற தனித்திறமை பெற்றவர் தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் காமெடி டைம் என்ற சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்தார். சிட்டிபாபு அவர்களும் இணைந்து பணியை தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக இளமை புதுமை, செலிபிரிட்டி கிச்சன் போன்ற நிகழ்ச்சிகளிலும் கூட இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். இவருடைய பேச்சுத்திறமைலையே இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட தொகுப்பாளராக பணியாற்றினார்.இப்படி அவர் தனித்திறமையை வெளிப்படுத்தி கொண்டிருக்கும்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு என் வழி தனி வழி என்ற திரைப்படத்தையம் கூட இவர் நடித்திருப்பார். அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ் ஏண்டா தலையில எண்ண வைக்கல போன்ற காமெடி திரைப்படங்களிலும் கூட இவர் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதையும் இவர் பெற்றுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகும் கூட இவர் தன்னுடைய பணியை விடவில்லை. மேலும் தொலைக்காட்சிகளிலும் சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் வருகிறார் நமது அர்ச்சனா. இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. அவர் பெயர் சாரா.
இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ச ரி க ம பா என்ற நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்குகிறார். தொகுப்பாளினி அர்ச்சனாவும் மற்றும் அவருடைய மகள் சாராவும் சேர்ந்து ஜீ தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை இருவரும் தொகுத்து வழங்கினார்.அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே சேர்ந்து ஒரு விளம்பரத்திலும் கூட நடித்துள்ளார்கள்.
இந்தநிலையில் ஓணம் பண்டிகை அன்று தனது மகளுக்கு ஓனம் புடவையை கட்டிக்கண்டு சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் உங்கள் மகளை குழந்தையாக பாருங்கள். உங்கள் குழந்தையை குழந்தையாக இருக்க விட மாட்டீங்களா என்று ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.
https://www.instagram.com/p/CEk_hyMlW53/?utm_source=ig_web_button_share_sheet
இதற்கெல்லாம் நமது அர்ச்சனா இன்னும் அவள் குழந்தை இல்லை என்று பதிலளித்துள்ளார்.

