தல அஜித் படத்தில் அந்த ரோல் தனக்கு கொடுக்காத காரணத்தால் இயக்குனரிடம் கோபப்பட்ட தளபதி விஜய்..!

0
388
ajith-vijay-cineseithigal
ajith-vijay-cineseithigal

ஆரம்ப காலத்திலிருந்தே சினிமாவில் ஒரே நேரத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகர்களாக மாறி இருப்பவர்கள்தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களுடன் நடித்த பல நடிகர்கள் இன்று சினிமாவிலேயே இல்லை.

அதுமட்டுமல்லாமல் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1995 ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் நேருக்கு நேர் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர்.

ஆனால் சில நாட்களுக்கு பிறகு கால்ஷீட் பிரச்சனையால் தல அஜித் நேருக்கு நேர் படத்தில் இருந்து விலக நேரிட்டது. அதன் பிறகுதான் சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின் அஜித் படத்தில் விஜய் நடிக்க விரும்பிய கதாபாத்திரத்தில் என்னை ஏன் கூப்பிட வில்லை என பிரபல இயக்குனரிடம் செல்லமாக கூறப்பட்டதாக அந்த இயக்குனர் கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது மங்காத்தா தான். அந்த படத்தில் தல அஜித்துடன் அர்ஜுன் நடித்து இருப்பார். அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க விரும்பியதாகவும், அதை ஏன் என்னிடம் முதலில் கூறவில்லை எனவும் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் விஜய் செல்லமாக கோபித்துக் கொண்டதாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

அதனால என்ன சார், மீண்டும் நீங்க ரெண்டு பேரும் ஒன்னா நடிக்கும் படத்தை நானே டைரக்ட் பண்ணுறேன் என சம்மதம் தெரிவித்தாராம் வெங்கட் பிரபு.