”களத்தில் இன்னும் அஜித் இருக்கிறார்”, விளக்கம் அளித்த பிரபல சினிமா விமர்சகர்

Ajith
Ajith

Ajith-Vijay: நடிகர் அஜித்தின் புதிய படங்களின் அப்டேட் எதுவும் வராததாள், விஜயுடன் அஜித் போட்டி போட முடியவில்லை என ரசிகர்களிடம் பேச்சு எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள பிரபல சினிமா விமர்சகர், ” அஜித் இன்னும் ஆட்டத்துல தான் இருக்கார் ” என விளக்கம் அளித்துள்ளார்.

மாஸ் ஹீரோக்களின் ஒருவரான நடிகர் அஜித் தற்போது ”விடாமுயற்சி” என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிவுட்டில் மிகப் பிரபலமான ஹீரோக்களில் விஜய், அஜித் மிக முக்கியமானவர்கள். இருவருமே ஒரே நேரத்தில் சினிமா துறையில் வளர்ச்சி அடைந்தவர்கள். ஆனால் சமீப காலமாக அஜித் நடிப்பதை விட பைக் டூர் செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அதே நேரம் விஜய் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் ”லியோ” படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ”தளபதி 68” லும் பிஸியாகி விட்டார். ஆனால் அஜித்தின் ”விடாமுயற்சி” இன்னும் தொடங்காத நிலையில் அஜித் தொடர்ச்சியாக பைக் டூரில் பிசியா இருக்கிறார். ”விடாமுயற்சி” படத்தின் அப்டேட்டிற்காக  காத்திருக்கும் ரசிகர்கள், இந்நிலையில் இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் கேபிள் சங்கர் சமீபத்திய பேட்டியில், கடந்த பொங்கல் அன்று வெளியான விஜயின் ”வாரிசு” படத்தைவிட அஜித்தின் ”துணிவு” நல்ல வரவேற்பை பெற்றது. அப்படி இருக்கும் போது அஜித் எப்படி ஃபீல்டில் இல்லை என்று சொல்ல முடியும்.

”விடாமுயற்சி” படத்தின் சூட்டிங் முடிந்ததும் , அதன் பிசினஸ் பெரிய அளவில் இருக்கும். அதற்காக அஜித்தை ஆட்டத்தில் இல்லை என்று எப்படி சொல்லி விட முடியும். அஜித் இன்னும் ஃபீல்டில் இருப்பதால்தான் அவரைப் பற்றி பேச்சே வருகிறது, என கூறியுள்ளார்.

இவரது பேட்டியை ஷேர் செய்து வரும் அஜித் ரசிகர்கள், ”அஜித் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சூட்டிங் வராமல் இருக்கட்டும். ஆனால் அவர் சொன்னபடி வந்துவிட்டால் எல்லா ஹீரோக்களையும் புலம்ப விட்டுவிடுவார்” என வெறித்தனமாக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் விரைவில் ”விடாமுயற்சி” அப்டேட் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.