ரஜினியின் படையப்பா படத்திற்கு பாடை கட்டும் அளவிற்கு ஒரு கதை வச்சிருக்கேன் என விஜயின் பதிலுக்காக காத்துக்கிடக்கும் இயக்குனர்..!

0
93
vijay-cineseithigal
vijay-cineseithigal

The director is waiting for Vijay’s reply that there is a story to the extent of composing a song for Rajinikanth’s Padiyappa: தற்போது தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் வலம் வரும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். இவர் சில வருடங்களிலேயே தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் தன்னுடைய புகழை பதித்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது தளபதி விஜய் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது சன் டிவியில் கூட ஒளிபரப்பாகி விட்டது.

இதை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் தளபதி 65வது திரைப்படத்தை இயக்க உள்ளார்கள் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது

இதை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தளபதி யை வைத்து படம் இயக்க காத்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கமர்சியல் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் விஜய்க்காக ஒரு கதையை எழுதியுள்ளாராம்.

கேஎஸ் ரவிக்குமார் ரஜினியின் பல்வேறு திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றவர் அந்தவகையில் ரஜினியை வைத்து படையப்பா எனும் திரைப்படத்தை இயக்கி வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தளபதி மட்டும் ஓகே சொன்னால் போதும் நாளைக்கு சூட்டிங்கில் இறங்கி விடுவேன் என கேஎஸ் ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு தளபதி விஜய் இளம் இயக்குனரை வைத்து திரைப்படம் இயக்கி வரும் நிலையில் தற்போது பழைய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பாரா  என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் மின்சார கண்ணா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு அவர் இயக்கிய திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது ஆனால் தற்போது தளபதியிடம் இருந்து சம்மதம் வருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

vijay-cineseithigal
vijay-cineseithigal