எனக்கு ஒரு நடிகர்லாம் பத்தாது என்னோட டர்கெட்டே வேற.. என பக்காவாக காய் நகரத்தும் நடிகை வாணி போஜன்..!

0
131
vani-bhojan-cineseithigal
vani-bhojan-cineseithigal

actress vaani bhojan latest speech: ஒரு காலத்தில் வெள்ளித்திரை நடிகைகள் தன்னுடைய வயதான காலத்தில் சின்னத்திரைக்கு வந்து கொண்டிருந்தார்கள் ஆனால் தற்போதெல்லாம் சின்னத்திரையில் புதுப்புது நடிகையாக அறிமுகம் படுவதன் காரணமாக இவர்கள் வெள்ளித்திரையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்தவகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்தான் நடிகை வாணி போஜன் இவரை ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலமான நடிகை வாணி போஜன் சமிபத்தில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து லாக்கப் எனும் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தற்போது சியான் விக்ரம் நடிப்பில் உருவாகும் 60வது திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் தற்போது திரையுலகில் மிக பிஸியாக இருந்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் வாணிபோஜன் நடித்த திரைப்படத்திலேயே மிகப் பெரிய முதலீடு போட்டு உருவாகும் திரைப்படம் இதுதான்.  மேலும் வாணி போஜன் தனது வாழ்வில் நடிக்கும் முன்னணி நடிகர் திரைப்படம் என்றால் அது விக்ரமுடன் நடிக்கும் இந்த திரைப்படம் தான்.

சமீபத்தில் தொகுப்பாளர் ஒருவர் நடிகை வாணி போஜனிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் அப்பொழுது தமிழ் சினிமாவில் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை என கேட்டுள்ளார்கள். நடிகை வாணி போஜன் தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது.

ஆகையால் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு திரைப்படம் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறியதை பார்த்த ரசிகர்கள் பணம் பத்தும் செய்யும் என்று பார்த்திருப்போம் இது 16ம் செய்யும் போல  எனக் கிண்டல் எடுத்துள்ளார்கள்.

vani bhojan-cineseithigal
vani bhojan-cineseithigal