என்னுடன் நெருக்கமா இருந்தவர்கள் எல்லாம் உடனே கொரோனா டெஸ்ட் எடுங்துடுங்க..! குண்டை தூக்கிபோட்ட வாணி ராணி சீரியல் நடிகை..!

0
326
vaani-rani-cineseithigal
vaani-rani-cineseithigal

நாடு முழுவதும் கொரோனாவின்  தாக்கம் மிக அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது இந்த வேலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. என்னதான் புதுப்புது திட்டங்களை கொண்டு வந்தாலும் கொரோனா நம் நாட்டை விட்டுப் போகும்படி இல்லை.

அதுமட்டுமில்லாமல் இந்த வைரஸ்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் மிகவும் பீதியில் உள்ளார்கள். சாதாரண ஏழை மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்த கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.

இதை தொடர்ந்து தற்போது சன் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் வாணி ராணி என்ற சீரியலில் நடித்த பிரபல நடிகையான நவியா சுவாமிக்கு தற்போது கொரோனா இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன, இவர் தமிழ் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தன் நடிப்பு திறனை வெளிக்காட்டி வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் தமிழ் நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை கர்நாடக மாநிலத்திலே முடித்துவிட்டு அதன் பிறகாக கர்நாடகாவில் பிரபல சேனலில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தனது இன்ஸ்டாகிராமில் நவ்யா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கு கோரணா இருப்பது முழுக்க முழுக்க உண்மை தான். அதுமட்டுமில்லாமல் தன்னுடன் நெருக்கமாக இருந்த அனைவருமே முதலில் சென்ற கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மேலும் அனைவரும் தனிமைப் படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இது ஒன்றம் அசிங்கப்படும் விஷயமே கிடையாது. நான் நலமாகத்தான் இருக்கிறேன் எனக்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை விரைவில் குணமடைந்து உங்களை மகிழ்விப்பேன் அதே போல் நீங்களும் உங்கள்  நலன் கருதி பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம் எனக் கூறியுள்ளார்.