இயக்குனரா..? நடிகரா..? தளபதி விஜய் மகனுக்கு இருக்கும் ஆசையை பார்த்தீர்களா?

0
581
vijay-sanjay-cineseithigal
vijay-sanjay-cineseithigal

சினிமா துறையில் மட்டும் அல்லாமல் மற்ற துறைகளிலும் தனது தந்தை என்ன தொழில் செய்கிறார் அதை நாடி அவருடைய மகன்களும் அதே தொழிலை செய்வது வழக்கம் தான். ஒரு பிரபல நடிகரின் மகன் ஒருவர் நடிகராவது ஒரு பெரிய விஷயமே இல்லை.

ஏன் நடிகர் சிவகுமார் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து அவருடைய மகன் சூர்யாவும் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் அவருடைய தம்பியும் நடிகராகவே வலம் வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகர் சியான் விக்ரம் அவர்கள் கூட ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தனது மகனை கதாநாயகனாக ஆக்கி அழகு பார்த்தார். அதேபோல தளபதி விஜய் மகனான சஞ்சயும் திரைப் படத்தில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

ஆனால் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட துறை சம்பந்தமான படிப்பில் புகழ்பெற்று பல குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது மாஸ்டர் பட தயாரிப்பாளர் மூலம் பிரிட்டோ வின் அடுத்த திரைப்படத்தில் தளபதி விஜயின் மகன் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தில் வேலைகள் தற்போது ஊரடங்கு காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் பழைய நிலைமைக்கு வந்த பிறகு இந்த திரைப்படம் அஸ்திவாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது அந்த இயக்குனர் இந்த செய்தி அனைத்தும் பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.

எங்கள் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு நடிகராகும் ஆசையை கிடையாது. அவருக்கு இயக்குனராக ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் அவர் படித்து முடித்த பிறகுதான் தெரியும் அவர் ஹீரோவா இல்லை இயக்குனரா என்பது.

மேலும் மாஸ்டர் படம் ஒருபோதும் ஓடிடியில் வெளி வராது எத்தனை வருடம் ஊரடங்கு நீடித்தாலும் திரையரங்கத்தில் தான் வெளியாகும் என பிரிட்டோ வேகத்துடன் கூறியுள்ளார்.