காலில் விழாத குறையாக கதறியும் ஒத்துக் கொள்ளாமல் தன் உயிரை பணய வைத்த தல அஜித்..!

0
278
valimai-cineseithigal
valimai-cineseithigal

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தல அஜித் இவர் முதன்முதலாக அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் மொழி மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

தற்போது தல அஜித் பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படமானது இதுவரை யாரும் எதிர்பார்த்திராத போலீஸ் கதையாகும். மற்றும் பல முக்கிய கருத்துக்களை இந்த திரைப்படத்தை மூலம் கூறி இருக்கிறேன் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த மெகா ஹிட்டான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் பயன்படுத்தாத சில முக்கியமான விஷயங்களை இந்த திரைப்படத்தில் பயன்படுத்துவதாக கூரியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் செட் போட்டு நடத்தப்பட்டு வருகிறது மேலும் இந்த சண்டை காட்சிகளில் சுப்பிரமணியன் இயக்கி வருகிறார்.

பொதுவாக தல அஜித்திற்கு ரிஸ்க் எடுப்பது என்றால் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டார். அதை தான் இந்த திரைப்படத்திலும் செய்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரு கடிணமான காட்சிக்காக டூப் போட்டுக்கலாம் என இயக்குனர் வினோத்தும் சுப்பிரமணியனும் தல அஜித்துடன் கெஞ்சுகிறார்கள். ஆனால் தல அஜித் இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தன் உயிரைப் பணய வைத்து இந்தக் காட்சியில் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் கார் சேசிங் சீன் ஆனது கண்டிப்பாக ரசிகர்களின் வாயை பிளக்க வைக்கும் என கூறி உள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலமாக தல அஜித்தின் ரேஞ்சே மாறப்பகிறது என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தை விட சுவாரஸ்யமான காட்சிகள் அதிகமாக இந்த திரைப்படத்தில் உள்ளன. அதுமட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கும் படியாகவும் இந்த திரைப்படம் இருக்கும் என இந்த திரைப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.