விரைவில் கல்யாண சோறு போடாப்போகும் சிம்பு..! பொண்ணு யாருன்னு தெரியுமா..?

0
694
simbu-cineseithigal
simbu-cineseithigal

தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் சிம்பு (simbu) இவருடைய முழு பெயர் சிலம்பரசன் இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான  டி.ராஜேந்திரனின் மகன் ஆவார்.

இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகர் சிம்பு நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த “மன்மதன்” என்ற திரைப்படத்தின் முழு கதையையும் இவர் எழுதியுள்ளார்.

தற்போது மாநாடு என்ற திரைப்படத்தில் பிஸியாக உள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் முழுவதும் ஒரு அரசியல் கருத்தை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாம்.

மேலும் நமது லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இந்த திரைப்படத்திற்காக லண்டனுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு தன் உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளாராம். மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்கள் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவலை  விரைவில் வெளியிடுவதாக கூறி உள்ளார்கள்.

மேலும் இதை தொடர்ந்து கன்னடத்தில் “மஃப்டி”  என்ற திரைப்படத்தில் நடிப்பதாக உள்ளாராம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மாதத்தில் தொடரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் சிம்புவிற்கு வரும் “ஆகஸ்ட் மாதத்தில் திருமணம்” நடக்கப் போவதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.

அதாவது அவருக்குத் துணையாக வரப்போகும் பெண் அவருடைய நெருங்கிய சொந்தக்காரப் பெண்ணாம். மேலும் இது குறித்து அதிகப்பூர்வமான செய்தி இன்னும் வெளியாகவில்லை. மேலும் இதுகுறித்து பிரபல விடிவி கணேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்புவுக்கு விரைவில் திருமணம் ஆக போவதாக கூறியுள்ளார்.