வெறித்தனமாக களத்தில் இறங்கும் சிம்பு!! பரபரக்கும் மாநாடு பாடல் காட்சி !!!

0
129
simbu
simbu

சென்னை:
மாநாடு பட ஷுட்டிங்கிற்கு நடிகர் சிம்பு சரியான நேரத்துக்கு ஆஜராகி விடுவதாக படக்குழுத் தெரிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதை தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

simbu
simbu

இவர், ‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பேச்சுவார்த்தை
இந்தப் படத்தின் பூஜை மற்றும் படப்படிப்பு கடந்த வருடம் தொடங்கிய வேகத்திலேயே நின்றது. இதனால், படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சிம்பு, படத்தில் நடிப்பார் என்றும் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவார் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இயக்குனர் பாரதிராஜா
இதையடுத்து இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.இயக்குனர் சேரன் கிளாப் அடித்தும், சீமான் கேமராவை ஆன் செய்தும் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தனர். இதில் இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, டி.சிவா, கே.ராஜன், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

simbu
simbu

அப்துல் காலிக் சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன், மனோஜ், டேனியல் உட்பட பலர் நடிக்கின்றனர். சிம்பு, அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென லொகேஷன் மாறியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தீம் பார்க் ஒன்றில் இப்போது நடந்து வருகிறது.

simbu
simbu

ஒழுங்காக வருகிறார்
படத்துக்காக அங்கு ஸ்பெஷல் செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதில், சிம்புவுடன், கல்யாணி, அஞ்சனா கீர்த்தி பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் இருநூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஆடி வருகின்றனர். இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதமாக, படப்பிடிப்புக்கு சிம்பு ஒழுங்காக வருகிறார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.