பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து.. ! மதிப்பெண்களை அள்ளித்தர சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி..!

0
361
10-th-exam-cineseithigal
10-th-exam-cineseithigal

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு இன்பசெய்தி. கொரோனா தாக்கத்தின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவிதுள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு நாடுகளிலும் மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் தற்போது ஒரு சில மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கில்  நன்மைகள் இருந்தாலும் ஒரு சில மக்கள் வலியும் வேதனையும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் என பல நிர்வாக துறைகளிலும் தற்போது மூடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாமலே இழுபறியில் இருந்து கொண்டிருந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளும் புதுப்பிக்கப்பட்டது. அதனால் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்கள் ஒன்று சேர்ந்த ஒரு முடிவு எடுத்துள்ளார்கள்.

மேலும் இந்த பத்தாம் வகுப்பு தேர்வு பற்றி எடப்பாடி பழனிச்சாமி தற்போது லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அவ்வாறு பேசுகையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளார். இதைதொடர்ந்து பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வுகள் மட்டும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மறு தேர்வு தேதி பின்னர் அர்விக்கபடும் என கூறியுள்ளார்

அதுமட்டுமல்லாமல் இந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுபிற்க்கு தேர்ச்சி செய்யப்படுவதாகவும். அவர்களுக்கான மதிப்பெண்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.