ஹீரோயினாக களமிறங்கிய புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. என்ன கருமம்டா இது என கலாய்த்த ரசிகர்கள்

லாஸ்லியா
லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. ஆனால் ஆரம்பத்தில் இருந்தளவு ரசிகர்கள் அதன் பிறகு குறைந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு லாஸ்லியா காதலில் விழுந்தது கூட காரணமாக இருக்கலாம்.

ஆனால் சினிமாவில் வரும் வில்லனைப் போல் அவரது அப்பா இடையில் வந்து காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதனைத்தொடர்ந்து அவ்வப்போது விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த லாஸ்லியா ஹீரோயினாக அவதாரம் எடுக்கப் போகிறார் என செய்திகள் வெளிவந்தது.

அதற்கு ஏற்றார்போல் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் நாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் காமெடியனாக நடிகர் சதீஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையாக உருவாக இருப்பதால் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகயுள்ளது.

மேலும் முதல் முறையாக லாஸ்லியா சினிமாவில் நடிக்க இருப்பதால் அவரது ஆர்மி நண்பர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் லாஸ்லியா தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் நாள் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு சில ரசிகர்கள் என்ன கருமம்டா இது என கலாய்த்து உள்ளனர். மேலும் சிலரோ லாஸ்லியாவின் புகைப்படம் மற்றும் ஹீரோயின் ஆனதற்கு வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர்.