ரஷ்யாவில் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு… விக்ரமின் ஆக்‌ஷன் திரில்லர் கோப்ரா ரிலீஸ் எப்போது?

0
347
vikram
vikram

சென்னை: விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகி உள்ளது. அருள்நிதி நடித்த டிமான்டி காலனி, நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்து இயக்கும் படம் கோப்ரா

விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இது அவருக்கு 58-வது படம். கதாநாயகியாக, ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர் ஜே.ஜி.எப் படத்தில் நடித்தவர்.

இர்பான் பதான் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மிருளானி ரவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. அனைத்து மொழிக்கும் ஏற்றது போல டைட்டில் வேண்டும் என்றதால் கோப்ரா என்று வைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் டைட்டிலுக்கும் விக்ரம் கேரக்டருக்கும் தொடர்பு இருக்கிறது என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்கனவே கூறியிருந்தார்.

ரஷ்யாவில் கிளைமாக்ஸ் பெரும்பாலான ஷூட்டிங் கொல்கத்தாவில் நடித்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக படக்குழு அங்கு செல்ல இருக்கிறது. இதற்கிடையே, இந்தப் படத்தில் மலையாள இளம் ஹீரோ ஷேன் நிகம் நடிக்க இருந்தார். அவருக்கு கேரள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளதால், மற்றொரு இளம் மலையாள நடிகரான சர்ஜானோ காலித் நடிக்கிறார்.

மே மாதம் ரிலீஸ் இதன் மோஷன் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. அதில் 2020-ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி தெரியவந்துள்ளது. மே மாதம் 21 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. ரம்ஜான் விடுமுறையை கருத்தில் கொண்டு படம் ரிலீஸ் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.