பிரபல நடிகை திருமணத்திற்கு பிறகும் காஸ்ட்யூம் டிசைனர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஷ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற நடிகை ஷ்ரேயா அங்கும் உச்சம் தொட்டார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தனது காதலரான ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரேய் கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார். அவர் கணவருக்கு லிப் லாக் கொடுத்த போட்டோ வைரலானது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்பு இல்லாமல் இருந்த ஷ்ரேயா, தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக நீச்சல் குளத்தில் பிகினியில் ஆட்டம் போட்ட வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்தார்.
திருமணத்திற்கு ஆடை விஷயத்திலும் அலட்சியம் காட்டி வருகிறார். பொது நிகழ்ச்சிகளிலும் கிளாமரை தூக்கி காட்டும் படுமோசமான உடைகளை உடுத்தியே பங்கேற்கிறார். இந்நிலையில் நடிகை ஷ்ரேயா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார். அதாவது நடிகை ஷ்ரேயா பேஷன் நிகழ்ச்சியில் கலந்து படுகவர்ச்சியாக அவர் உடை அணிந்து இருந்தார். அதோடு அவரது ஆடை வடிவமைப்பாளருடன் ரொம்பவே நெருக்கமாக இருந்தார் ஷ்ரேயா. ஷ்ரேயாவை அந்த ஆடை வடிவமைப்பாளர் தூக்கி வைத்திருக்க ஜாலியாக சிரித்தப்படி போஸ் கொடுத்திருக்கிறார் ஷ்ரேயா. இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு கல்யாணமாகி கணவர் இருக்கிறார் ஞாபகம் இருக்கிறதா என கேட்டு வருகின்றனர். ஏற்கனவே திருமணத்திற்கு பிறகு ஷ்ரேயா உடுத்தி வரும் ஆடைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆடை வடிவமைப்பாளருடன் அவர் நெருக்கமாக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே திருமணமான பிரபல நடிகை, தனது காஸ்ட்யூம் டிசைனரிடம் காட்டிய நெருக்கத்தால் அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.