டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் திறக்கப்போகும் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்.. புகைப்படங்கள்

0
427
stadium-1
stadium-1

உலகத்தரத்தில் மிகப்பிரம்மாண்டமாக அகமதாபாத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தின் முழு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. Motera ஸ்டேடியத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்தி 25 ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் அமரலாம். இந்த ஸ்டேடியம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் ஸ்டேடியத்தை விட பெரியதாம்.

இந்த ஸ்டேடியம் உருவாக்குவதற்காக 45 குடும்பங்கள் வெளியிடப்பட்டுள்ள செய்தி கவலை அளிக்கிறது. பிப்ரவரி 24ஆம் தேதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நரேந்திர மோடி தலைமையில் இந்த ஸ்டேடியம் திறந்து வைக்கப்பட உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் வருகைக்காக ஸ்டேடியத்தின் அருகில் உள்ள குடிசைப் பகுதிகள் அனைத்தும் அகற்றப்பட்டு சுவர் எழுப்பப் படுகிறது என்பது கொடுமை தான்.

இங்கு முதல் கிரிக்கெட் போட்டியாக வேர்ல்டு லெவன் vs ஆசியா லெவனுக்கான டி20 தொடர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கட்டுமானப்பணி தாமதம் ஏற்பட்டதால் இந்தப் போட்டி தடைசெய்யப்பட்டு டாக்காவில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு முதல் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். தற்போது அந்த ஸ்டேடியத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.