முன்னாள் காதலனுடன் இரவு முழுக்க பார்ட்டியில் ஒன்றாக இருந்திருக்கிறார்.. சனம் குறித்து தர்ஷன் பகீர்!

0
272
சனம் .தர்ஷன்
சனம் .தர்ஷன்

சென்னை: சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள தர்ஷன், பதிலுக்கு அவர் மீதும் அதிர வைக்கும் குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். மாடலான சனம் ஷெட்டி 2016 ஆம் ஆண்டின் மிஸ் சவுத் இண்டியா பட்டத்தை வென்றுள்ளார். படங்களிலும் நடித்து வருகிறார் சனம் ஷெட்டி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.

வெறும் நட்பு மட்டும்தான் இந்நிலையில் சனம் ஷெட்டியும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனும் காதலித்து வந்தனர். பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் ஷெரினுடன் நெருக்கமாக பழகினார். ஆனால் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என்று கூறினார். அதேநேரத்தில் ஷெரின், தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார். இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினே கூறியிருக்கிறார்.

போலீஸில் புகார் தர்ஷனும் ஷெரினும் நெருக்கமாக பழகுவதை பார்த்து மன வருத்தத்திற்கு ஆளானார் சனம் ஷெட்டி. இதனால் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் சனம் ஷெட்டி நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதில் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தெரிவித்தார்.

திருமணத்திற்கு மறுப்பு நிச்சயதார்த்தம் நடந்த போட்டோக்களையும் வீடியாக்களையும் ஆதாரங்களாக சமர்பித்தார் சனம் ஷெட்டி. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சனம், பிக்பாஸ் முடிந்த பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறிய தர்ஷன், தற்போது தான் ஒரு நடிகை என்பதால் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தார்.

தர்ஷன் பதில் மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தனக்கு கள்ள தொடர்பு இருப்பதாக தர்ஷன் தவறாக பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் தான், தர்ஷனுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும் கூறினார் சனம் ஷெட்டி. தர்ஷன் மீதான சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பி வந்த நிலையில் சனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து தர்ஷன் பதிலளித்திருக்கிறார்.

முன்னாள் காதலன் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன், பதிலுக்கு சனம் ஷெட்டியின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். தங்களின் நண்பர்களான சத்யா மற்றும் பிக்பாஸ் ரம்யாவின் திருமண நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி பங்கேற்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு சனம் ஷெட்டியின் முன்னாள் காதலனும் வந்திருக்கிறார்.

ஆதாரம் இருக்கிறது அவருடன் சேர்ந்து இரவு முழுக்க பார்ட்டியில் இருந்திருக்கிறார். இதை அவர்களே என்னிடம் சொன்னார்கள். அதை நான் எப்படி கூற வேண்டும் என்று தெரியவில்லை. நான் சொல்லும் அனைத்து விஷயங்களுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை மீடியாவிடம் காட்டவிரும்பவில்லை. கமிஷனர் ஆபிஸில் கேட்கும்போது அவற்றை சமர்ப்பிப்பேன்.

இன்னும் பாக்கி அதேபோல சனம் ஷெட்டி எனக்கு 15 லட்சம் ரூபாய் வரை பண உதவி செய்துள்ளதாக நேற்று கூறியிருந்தார். நான் என்னுடைய வரி பிரச்சனைக்காக மூன்றரை லட்சம் ரூபாய் வாங்கியிருந்தேன். அதையும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் கொடுத்துவிட்டேன். அதேபோல எங்களின் நிச்சயதார்த்தத்தின் போது இரண்டரை லட்சம் ரூபாய் செலவானது. அதை மட்டும்தான் நான் இன்னும் கொடுக்கவில்லை.

பிரேக்கப் முடிவு சனம் ஷெட்டி மூலம் தனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. அந்த நன்றியை எப்போதும் மறக்க மாட்டேன். நான் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியிருந்தேன். அப்போது அந்த தயாரிப்பாளர்களிடம் என்னை பற்றி தவறாக பேசி எனக்கு வந்த பட வாய்ப்புகளை கேன்சல் செய்தார். இதனால்தான் அவரை பிரேக்கப் செய்ய முடிவு செய்தேன். நான் இவ்ளோ கஷ்டப்பட்டு இந்தளவுக்கு வந்ததே சினிமாவில் நடிக்கதான். ஆனால் அதையே அழிக்க பார்த்தார் சனம் ஷெட்டி.

மிரட்டினார் என்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். நான் சனம் ஷெட்டியை துன்புறுத்தவில்லை. என்னை மிரட்டினார். எங்கள் நாட்டில் வந்து என்னை ஏமாற்றிவிட்டு நீ எப்படி வளருகிறாய் என பார்க்கிறேன் என மெஸேஜ் மூலமாக மிரட்டினார். அந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. நான் எப்போதும் சனம் ஷெட்டியின் மீது போலீஸில் புகார் அளிக்க மாட்டேன்.

கல்யாணம் பண்ணமாட்டேன் அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். நிறைய படங்களில் என்னை ரெஃபர் செய்திருக்கிறார். அவை நடக்காமல் போயிருக்கலாம். ஆனால் அவர் பல உதவிகளை செய்திருக்கிறார். இதற்கு மேலும் அவரை நான் எப்படி திருமணம் செய்து கொள்வது? நிச்சயமாக அவரை கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். இவ்வாறு தர்ஷன் தெரிவித்தார்.