உளுந்து கேரட் போண்டா செய்வது எப்படி????

bonda
bonda

உளுந்து கேரட் போண்டா
தேவை:
உளுந்து – 250 கிராம், கேரட் (துருவியது) – அரை கப், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் – ஒன்று, கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை (சேர்த்து) – ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி (துருவியது) – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:
முதலில் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைக்கவும். பிறகு அதில் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சூடான எண்ணெயில் மாவைச் சிறிய போண்டாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சிறப்பு:
இதில் பீட்டாகரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்துக்கு மினுமினுப்பைத் தருகிறது. மாதவிடாய் நேரத்தில் வரும் சிறுநீர்கடுப்பை சரிசெய்கிறது. எலும்புகளை வலுப்படுத்தும். நரம்புகளை உறுதிப்படுத்தும். நார்ச்சத்து, பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது. பூப்பெய்தல் காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக இதைப் பெண் குழந்தை களுக்குச் செய்து தரலாம்.