இது எதுக்கு? மல்லேஸ்வரம் கோயிலில் கேஜிஎப் ஹீரோ திடீர் யாகம்… குடும்பத்துடன் பங்கேற்பு

0
340
YASH
YASH

கே.ஜி.எஃப் ராக்கி பாய் யஷ்க்கு பர்த்டே.. 5000 கிலோவில் கேக் வெட்டி மாஸ் காட்டிய ரசிகர்கள்! பெங்களூரு: கேஜிஎப் ஹீரோ யஷ், மல்லேஸ்வரம் கோயிலில் சிறப்பு யாகம் செய்துள்ளார். மொக்கின மனசு என்ற கன்னடபடம் மூலம் நடிகராக அறிமுகமானவர், யஷ். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், ரூபா ஐயர் இயக்கிய சந்திரா படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இவர் நடித்த ‘கே.ஜி.எஃப்’ என்ற படம் கன்னடம், தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

சூப்பர் ஹிட் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானதால் இந்தியா முழுவதும் அறியப்பட்டார் யஷ். இந்தப் படத்தை நடிகர் விஷால் தமிழில் வெளியிட்டார். இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இதையும் இயக்குகிறார். இதன் கடைசி கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

வில்லனாக சஞ்சய் தத் இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயினாக நடிக்கிறார். ரவீனா டாண்டன், ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இதையும் வெளியிடுகிறார். இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் மாதமும் இரண்டாம் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னும் வெளியானது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹீரோ யஷ், மல்லேஸ்வரம் கோயிலில் சிறப்பு யாகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு யாகம் தனது மனைவியும் நடிகையுமான ராதிகா பண்டிட் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் இந்த கோயிலுக்கு சென்ற யஷ், அங்கு சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டார். இந்த சிறப்பு யாகத்தை முன்னிட்டு கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. அதோடு, பக்தர்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தின் வெற்றிக்காக இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.