அனக்கோண்டா ரிட்டர்ன்ஸ்.. 20 வருஷம் கழித்து மீண்டும் மிரட்டப் போகுது அந்த பிரம்மாண்ட பாம்பு

0
336
anaconda
anaconda

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகத்தையே மிரட்டிய ஹாலிவுட் படமான அனக்கோண்டா பாம்பு படம் மீண்டும் பிரம்மாண்டமாக மிரட்ட காத்திருக்கிறது. அமேசான் காடுகளில் இருக்கும் அரிய வகை அனக்கோண்டா பாம்பை வைத்து ஹாலிவுட்டில் 1997ம் ஆண்டு எடுத்த அனக்கோண்டா படம் உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை மிரட்டியது.

20 ஆண்டுகள் கழித்து அனக்கோண்டா பாம்பு படத்தை மறுபடியும் எடுக்கும் முயற்சியில் கொலம்பியா பிக்சர்ஸ் இறங்கியுள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

அனக்கோண்டா ஜெனிபர் லோபஸ், ஜான் ஒயிட், ஐஸ் க்யூப், கேரி வுஹ்ரர், எரிக் ஸ்டால்ஸ் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான படம் அனக்கோண்டா. இந்த படத்தை லூயிஸ் லோசா இயக்கியிருந்தார். பிரம்மாண்ட பாம்பு ஒன்று ஆட்களை அப்படியே முழுங்குவது போன்ற அதிபயங்கரமான காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்று உலகளவில் ரசிகர்களை கவர்ந்தது.

5 பாகங்கள் அனக்கோண்டா படம் 5 பாகங்களாக வெளியாகின. 2004ம் ஆண்டு தி ஹண்ட் ஃபார் தி ப்ளட் ஆர்சிட், 2008ம் ஆண்டு அனக்கோண்டா 3ம் பாகம் வெளியானது. 2009ம் ஆண்டு டிரைல் ஆஃப் ப்ளட் மற்றும் 2014ம் ஆண்டு லேக் பிளாசிட் vs அனக்கோண்டா என மொத்தம் அனக்கோண்டா பாம்பு கதை 5 படங்களாக வெளியாகின. ஆனால், முதல் பாகமான அனக்கோண்டா தான் இதில், உலகளவில் ஃபேமஸ் ஆனது.

அனக்கோண்டா ரிட்டர்ன்ஸ் 2014ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து அனக்கோண்டா பாம்பு கதையை படமாக்க கொலம்பியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதுவும் அனக்கோண்டா படத்தின் முதல் பாகமான அனக்கோண்டா படம் போல மிகவும் பிரம்மாண்டமாகவும், மிரட்டலாகவும் உருவாக்க கொலம்பியா நிறுவனம் முடிவு செய்துள்ள தகவலை முதல் பாகத்தை உலகம் முழுவதும் வெளியிட்ட சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது

ரசிகர்கள் ஹேப்பி அனக்கோண்டா படம் மீண்டும் உருவாகவுள்ள தகவல் ஹாலிவுட் முழுவதும் தீயாய் பரவி வருகிறது. அனக்கோண்டா படத்திற்கான ரசிகர்கள் இந்த அறிவிப்பை கேட்டு பயங்கர குஷியாகியுள்ளனர். அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக நல்ல திரைக்கதையுடன் அனக்கோண்டா படம் உருவானால் மீண்டும் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல கதாசிரியர் டாம்ப் ரெய்டர் மற்றும் ஸ்நோ ஒயிட் அண்ட் தி ஹன்ட்ஸ்மேன் படங்களுக்கு கதை எழுதிய பிரபல ஹாலிவுட் கதாசிரியர் எவான் டார்த்தி அனக்கோண்டாவின் புதிய படத்திற்கு கதை எழுதி வருகிறாராம். விரைவில் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

ஜெனிபர் லோபஸ் பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ் அனக்கோண்டா படத்தில் நாயகியாக நடித்து அசத்தியிருப்பார். அண்மையில் வெர்சேஸ் வர்த்தக நிறுவனத்துக்கு தூதுவராக மாறிய ஜெனிபர் லோபஸ், படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, தான் இப்பவும் ஹாட்டான நடிகை தான் என நிரூபித்துள்ளார். இந்த படத்திலும் அவர் இடம்பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.